Smart Boards for Modern Learning — Our Future Project!

மலையகத் தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகளை வழங்க மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் – கொழும்பு (UEDS) திட்டமிட்டுள்ளது. காணொளிகள், விளக்கப்படங்கள் மற்றும் மாணவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் கற்றல் செயற்பாடுகள் மூலம் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும், ஆர்வத்துடன் கற்கவும் உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆசிரியர்களின் கற்பித்தலை மேலும் சிறப்பாக்குவதுடன், மாணவர்களின் டிஜிட்டல் திறன்களை வளர்ப்பதற்கும் இம்முயற்சி துணைபுரியும். தொழில்நுட்பத்தின் வழியே கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவோம். மலையக மாணவர்களின் எதிர்காலத்திற்காக எம்முடன் கைகோருங்கள்!
